• Description
  • Additional information
  • Reviews (0)

Description

காலம் காலமாக இலங்கையின் மன்னார் மாவட்டம், சைவப் பாரம்பரியம் மிக்க சிவ பூமியாக விளங்கி வருவதை இலக்கிய, வரலாற்று ஆவணங்கள் கொண்டு நிறுவும் நூல். மன்னார் மாவட்டத்தில் விளங்கும் திருக்கேதீச்சரம் எனும் பாடல் பெற்ற திருத்தலம் முன்னை கோலோச்சி, பின்னை மண் மூடி, பிறகு பிரம்மாண்ட கோயில் அங்கே எழுந்த மெய் சிலிர்க்கும் அருள் வரலாற்றை விரிவாக விவரிக்கும் நூல்.

குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்த்தெடுக்க வழிகாட்டும் ஹவாய் தவத்திரு சுப்பிரமுனிய சுவாமிகளின் வாழ்வியல் வழிகாட்டி இந்நூலில் உள்ளது.

ஈடுபாடும் ஆர்வமும் உள்ள எவரும் திருக்கோயில்களில் பூசகராக வழிகாட்டும் திருக்கோயிலில் நாளாந்தப்பூசை பகுதி இந்நூலில் உள்ளது.

சைவ சமய வழிபாட்டுப் பாடல்கள் (விநாயகர் அகவல், தேவாரம் திருமுறை, அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, திருப்புகழ் உள்ளிட்ட பல தோத்திரங்கள்) இந்நூலில் உள்ளன.

மாதந் தோறும் சிவ நோன்புகள் பகுதி மாதாந்திர பண்டிகைகள், விரதங்களை விளக்குதிறது.

நினைத்ததை நிறைவேற்றும் பதிகங்கள் பகுதி  பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் திருமுறைப் பதிகங்களை வழங்குகிறது.

இறப்பு நாள் வழிபாட்டை நடத்த வழிகாட்டுதல் இந்நூலில் உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் விவரப் பட்டியல் இந்நூலில் உண்டு.

மொத்தத்தில் சைவக் களஞ்சியமாக விளங்கும் அற்புதமான நூல்.

Additional information

Weight 1.5 kg
Dimensions 15.5 × 21.5 × 5.5 cm
புத்தக வகை

அட்டைக் கட்டு

புத்தக மொழி

தமிழ்

எழுத்தாளர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

வெளியிட்ட வருடம்

2020

பக்கங்கள்

864

Reviews

There are no reviews yet.


Be the first to review “மன்னார் சிவபூமி”

You may also like…